தடுப்பு சுவரில் ஒரே ஜம்ப்.. கோழியை கவ்விப்பிடித்த சிறுத்தை - வீடியோ வைரல்
- சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
- சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி.-யில் பதிவாகி உள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான வீடியோக்கள் சமீப காலங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி.-யில் சிறுத்தை, காட்டு யானை என வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகும் சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். அந்த வகையில், கோம்யபுத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பான வீடியோவில் வீட்டு தடுப்பு சுவற்றின் மீது கோழி நின்று கொண்டிருக்கும் காட்சிகளும், அந்த வழியாக வந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Tamil Nadu: A leopard caught jumping and catching a hen on camera, in Coimbatore. pic.twitter.com/ZigYG6NxhJ
— ANI (@ANI) May 30, 2024