தமிழ்நாடு

கள்ளசாராய உயிரிழப்பு: வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? எடப்பாடி பழனிச்சாமி

Published On 2024-06-23 00:59 GMT   |   Update On 2024-06-23 01:17 GMT
  • "உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்" என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.
  • எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது,

கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகளை கேட்டறிந்தேன்.

34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, "மெத்தனால் விஷ முறிவு மருந்தான உயிர்க் காக்கும் Fomepizole மருத்துவமனையில் இருப்பு இல்லை" என்கிற வேதனையை செய்தியாளர்களிடத்தில் பகிர்ந்திருந்தேன். இதனை, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களே கவலையுடன் தெரிவித்தனர்.

நான் சுட்டிக்காட்டிய பிறகே நேற்று (21ம் தேதி) அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான Fomepizole ஆர்டர் செய்யப்பட்டு,

50-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தபிறகு இன்று (22ம் தேதி) மும்பையில் இருந்து தருவிக்கப்பட்ட Fomepizole மருந்துகள் விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.

"உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்" என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.

ஜூன் 20-ம் தேதி அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு "Fomepizole" மருந்துகள் கையிருப்பில் இருந்தன என்பதற்கான ஆதாரத்தை வெளியிட தயாரா?

ஜூன் 20 உயிர்க் காக்கும் விஷ முறிவு மருந்தான Fomepizole பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான Patient Case Sheet, Hospital Drug Inventory records மற்றும் TNMSC கையிருப்பு பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?

'ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரைக் காக்க போர்க்கால சிகிச்சை' அளிக்கப்பட வேண்டிய பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டு, 54 உயிர்களை இழந்த பிறகும்; வீண் விவாதத்தை தொடராமல், எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News