தமிழ்நாடு (Tamil Nadu)

மது விற்பனை ரூ.30 கோடி சரிவு... இதுதான் காரணமா?

Published On 2024-10-04 01:59 GMT   |   Update On 2024-10-04 01:59 GMT
  • காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
  • டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.250 கோடியை தாண்டி மது விற்பனை நடைபெறும். காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், அதற்கு முந்தைய நாட்களில் விற்பனை களைகட்டும்.

அந்த வகையில் காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் முந்தையநாள் மது விற்பனை அதிகமாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய தினம் ரூ.200 கோடிக்கு மது விற்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் 1-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. எனவே இந்த ஆண்டு ரூ.30 கோடி அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மது விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, 'டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மதுவை விட இப்போது சிலர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மாறிவிட்டனர். எனவே தான் இந்த சரிவு என்று கூறினர்.

Tags:    

Similar News