தமிழ்நாடு

தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் வரும், தேர்தல் முடிந்த பின்னர் வராது: அமைச்சர் ரகுபதி கிண்டல்

Published On 2024-03-05 15:09 GMT   |   Update On 2024-03-05 15:09 GMT
  • மக்களவை தேர்தலுக்காக மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்
  • போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது.

தேர்தலுக்கு தேர்தல் மதுரை எய்ம்ஸ் வரும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவை தேர்தலுக்காகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அப்பணிகள் நடைபெறாது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காக பாஜக தமிழகம் மீது பழி போட வேண்டாம். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

மேலும், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது என்று குற்றம் சாட்டிய அமைச்சர், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்றும் பாஜகவில் உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்துவதை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News