பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல்
- விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
- நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
விஜயகாந்தின் உடலை பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத் திடலில் வைக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக, பிரேமலாத, சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பிறகு, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு, நாளை மாலை விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
ராஜாஜி அரங்கில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.