மணலி துணை மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து: இருளில் மூழ்கிய சென்னை
- மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதனால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை மணலி துணை மின்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை முழுவதும் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது.
மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மத்திய சென்னை, வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மின்சார சேவையில் தடை ஏற்பட்டது. மின்தடையால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பிரதான சாலைகள் அனைத்திலும் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு முதலில் மின் விநியோகம் சீரடையும். மற்ற இடங்களுக்கு படிப்படியாக சீராகும் என மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்தார்.