தமிழ்நாடு

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம்: பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-12-23 09:51 GMT   |   Update On 2023-12-23 09:51 GMT
  • நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகிறது.
  • நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

செங்கல்பட்டு:

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகிறது. இதைத்தொடர்ந்து விடுமுறை மற்றும் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட் டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று மாலை முதல் சென்னை-திருச்சி மார்க்கத்தில் கார் மற்றும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி மற்றும் இருகுன்ற பள்ளி அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இன்று காலையும் வழக்கத்தை விட வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. செங்கல்பட்டு தாலுக்கா மற்றும் பட்டாளம் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரிசெய்தனர். கடும் நெரிசல் காரணமாக பாலாற்று பாலத்தில் வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து செல்கின்றன.

Tags:    

Similar News