கள்ளச்சாராயம் விவகாரம்- மதிமுக எம்.பி துரை வைகோ நேரில் ஆறுதல்
- உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
- சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு கள்ளக்குறுச்சி வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இவர்களை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.