தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,850 கனஅடியாக சரிவு
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,787 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,850 கன அடியாக சரிந்தது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,787 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,850 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.78 அடியாக உயர்ந்த அணையின் நீர்மட்டம், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.