திமுக கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில் செலுத்தக்கூடாது- எல்.முருகன்
- மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது.
- காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான்.
சென்னை:
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் உண்மை வெளிவரவே சிபிஐ விசாரணை கோருகிறோம்.
மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது. முடிவு இல்லை.
எங்கும் கள்ளச்சாராயம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு திமுக அரசாங்கம், முதலமைச்சர் தான். காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான். இதற்கெல்லாம் அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். இது தொடர்பான துறை அமைச்சர் விளக்கம் கூட அளிக்கவில்லை.
முதலமைச்சர் இந்த சம்பவத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் முழு உண்மையும் வெளிவரும்.
திமுக-வினர் கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும். மதுவில் செலுத்தக்கூடாது என்று கூறினார்.