தமிழ்நாடு

உயிரிழப்பில் அரசியல் செய்யாதீர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-10-07 05:05 GMT   |   Update On 2024-10-07 06:56 GMT
  • விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.
  • தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

சென்னை:

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது.

* 5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

* மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை

* 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது. இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது.

* சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102.

* விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.

* ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

 

* குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம்.

* தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

* அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

* அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

* 7500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

* குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News