தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

Published On 2023-09-19 07:38 GMT   |   Update On 2023-09-19 07:38 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
  • உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News