தமிழ்நாடு
அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது- அமைச்சர் பொன்முடி விளக்கம்
- பொது பாடத்திட்டத்தில் எந்த தவறும் கிடையாது.
- கல்வி தரத்தை மேம்படுத்த, துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொது பாடத்திட்டத்தில் எந்த தவறும் கிடையாது. தமிழக கல்வி கொள்கை விரைவில் அமலுக்கு வரும்.புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்வோம். அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது.
கல்வி தரத்தை மேம்படுத்த, துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
நிரந்தர பதிவாளர்கள், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.