தமிழ்நாடு
அறுபடை வீடு இலவச பயணம் நாளை தொடங்குகிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
- அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது.
- திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது. பின்னர், திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.