தமிழ்நாடு

அன்னியூர் சிவாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

Published On 2024-07-15 14:25 GMT   |   Update On 2024-07-15 14:25 GMT
  • தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
  • திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவிற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவின் வெளிப்பாடாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கழகத்தின் வேட்பாளராக களமிறங்கி இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள அண்ணன்

அன்னியூர் சிவா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

சட்டமன்ற உறுப்பினராக அவரது மக்கள் பணி சிறக்கட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News