தமிழ்நாடு

தமிழக அரசின் கனவு நனவான தருணம் இது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-01-19 13:02 GMT   |   Update On 2024-01-19 13:03 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
  • விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.

நேரு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தைடைந்ததை தொடர்ந்து, தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.

பிறகு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியாவின் முத்திரையான வீர மங்கை சிலையை நினைவுத் பரிசாக அளித்தார்.

தொடர்ந்து, ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் உரையாற்றியதாவது:-

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தாக்கூரை வரவேற்கிறேன். தமிழக அரசின் கனவு நனவான தருணம் இது. 6வது கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.

ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தினோம். விளையாட்டுத் துறையில், இந்திய அளவில் தமிழகம் முன்னேறியுள்ளது.

விளையாட்டுகளையும் கல்வியின் அங்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். தமிழக வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News