தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

Published On 2024-09-03 07:19 GMT   |   Update On 2024-09-03 07:26 GMT
  • இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும்-தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.
  • நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

சென்னை:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் எஸ்.யூ.5 பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தி உள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.

தமிழ்நாடு அரசின் எலைட் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம்.

இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும்-தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பாரா தடகள வீரர்களின் வரலாற்று சாதனைகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மேலும் அவர்கள் எதிர்கால போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News