தமிழ்நாடு

அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 புதிய பஸ்கள் - அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2024-08-28 08:39 GMT   |   Update On 2024-08-28 08:43 GMT
  • புதிய பஸ்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எஸ்.5 ரக 150 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது.

இதை , பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 150 புதிய பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.

புதிய பஸ்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பஸ்களில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள், மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 150 பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன் பஸ்சில் ஏறி அமர்ந்து அதிலுள்ள வசதிகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News