தமிழ்நாடு
106 நவீன நெல் சேமிப்புத் தளங்களையும் காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
- 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயலகத்திலிருந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ராஜாராமன், பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.