தமிழ்நாடு

தகைசால் தமிழர் விருது: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கினார் முதலமைச்சர்

Published On 2024-08-15 04:38 GMT   |   Update On 2024-08-15 06:05 GMT
  • இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
  • உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

சென்னை:

இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* சுதந்திர தினத்தை ஒட்டி மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

* இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

* துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரி கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

* அரசுத்துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களை செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் வழங்கப்படுகிறது.

* முதல்வரின் முகவரி துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலரான வனிதாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

* உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

* காலை உணவுத்திட்டத்துக்காக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்ஷினிக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

* நான் முதல்வன் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியதற்காக 5 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News