தமிழ்நாடு

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்- மு.க ஸ்டாலின்

Published On 2023-12-17 07:33 GMT   |   Update On 2023-12-17 10:02 GMT
  • தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி வைத்தார்.
  • ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து, ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

மழை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர்.

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்பட்டுள்ளது.

Tags:    

Similar News