தமிழ்நாடு

லைசென்சை புதுப்பிக்க அலைக்கழிப்பு - 15 நாட்களுக்கு மேல் காத்திருப்பதாக ஆதங்கம்

Published On 2024-03-07 12:10 GMT   |   Update On 2024-03-07 12:26 GMT
  • முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.
  • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

சென்னை:

ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாப்ட்வேர் மூலம் புதுப்பிப்பவர்களின் ஆதார் கார்டு, லைசென்ஸ், செல்போன் எண், ரத்த வகை ஆகியவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிவேற்ற எண் வழங்கப்படும்.

இந்த எளிமையான நடைமுறை வந்த பிறகு காத்திருக்க வேண்டியது இல்லை.

ஆனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல முறை வந்து செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது ஆட்கள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம்.

முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.

பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறுகையில், "லைசென்ஸ் புதுப்பிக்க முடியாமல் 15 நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.

எங்கள் உறவினர்கள் செங்குன்றம், அயனாவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

ஆனால் அண்ணா நகரில் மட்டும் இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அரசு உடனே தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News