நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
- கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வருகிற 31 ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு, கேரளா விரைந்த சிபிசிஐடி போலீசார் அம்மாநிலத்தில் வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர்.