தமிழ்நாடு

'மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர்': ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த சீமான்

Published On 2024-06-09 09:57 GMT   |   Update On 2024-06-09 09:57 GMT
  • இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது.
  • விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 மந்திரிகள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை. இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது என்று கூறினார்.

மேலும், மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில்,

"நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News