தமிழ்நாடு

நெல்லை மேயர் தேர்தல்- நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல்

Published On 2024-07-27 08:27 GMT   |   Update On 2024-07-27 08:27 GMT
  • நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
  • நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.

நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.

மேயர் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி மேலிட அறிவுறுத்தலின்படி மேயர் ராஜினாமா செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் 5-ந் தேதி நடக்க உள்ள நிலையில், நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது.

நெல்லை மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. கே.ஆர்.ராஜூ, கிட்டு, உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், பவுல்ராஜ் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.

கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை சந்தித்து மேயர் நாற்காலியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர்.

Tags:    

Similar News