தமிழ்நாடு
புதிய வகை கொரோனா- பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்
- சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்றால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
- ந்த வகை கொரோனா தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகி உள்ளது.
சென்னை:
சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் உருமாறிய KP.2 வகை அதிகம் பதிவாகி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்றால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா குறித்து இந்தியாவில் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை. இந்த வகை கொரோனா தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.