தமிழகத்தை தரக்குறைவாக பேசிய வடமாநில வாலிபருக்கு தர்மஅடி
- இரவு நேரத்தில் தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
- உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் ஆத்துமேடு பயணிகள் நிழற்குடையில் பச்சைகுத்தும் தொழிலாளிகளான தம்பதிகள் இரவு நேரத்தில் தங்குவது வழக்கம். அதன்படி இரவு நேரத்தில் அங்கு தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த வடமாநில ஆசாமி ஒருவர் அவர்களது சண்டையை தனது செல்போனில் படம் பிடித்தார்.
அதனை வீடியோ எடுத்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் இதுபோல்தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. எங்கள் ஊரில் இதுபோல் நடக்காது என பேசினார். இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை சத்தம்போட்டனர். இருந்தபோதும் அந்த வாலிபர் கேட்காமல் தமிழகத்தில் இதுபோல்தான் நடக்கிறது என்று பேசிக்கொண்டே இருந்தார்.
இதனால் அங்கிருந்த வியாபாரிகள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.