தமிழ்நாடு

விசைத்தறி நெசவாளர்களுக்கு இனி 1000 யூனிட் மின்சாரம் இலவசம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2023-03-03 15:45 GMT   |   Update On 2023-03-03 15:45 GMT
  • கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

சென்னை:

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த மின் கட்டண சலுகை அமல்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News