தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2024-08-16 14:12 GMT   |   Update On 2024-08-16 14:12 GMT
  • மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
  • மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தல்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.

அப்போது, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்," மழைநீர் வடிகால்களை தூர்வாறும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல கூறியுள்ளோம். மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

Tags:    

Similar News