தமிழ்நாடு

தமிழகத்தில் பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உத்தரவு

Published On 2024-07-02 11:32 GMT   |   Update On 2024-07-02 11:32 GMT
  • கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது.
  • 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.

பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.

அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது.

சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

Tags:    

Similar News