தமிழ்நாடு

புழல் ஜெயிலில் பரபரப்பு: துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல்

Published On 2023-08-27 06:46 GMT   |   Update On 2023-08-27 06:46 GMT
  • செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
  • கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார்.

செங்குன்றம்:

புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் ஒரு அறையில் இருந்த வெளிநாட்டு கைதிகள் 4 பேர் செல்போன் பயன்படுத்தி வந்தது அதிகாரிகள் சோதனையில் தெரிந்தது.

இதையடுத்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

நேற்று இரவு நைஜீரியா நாட்டை சேர்ந்த போதைப் பொருள் வழக்கில் தண்டனை பெற்று வரும் இஜிபா அகஸ்டின் சிபிக்கி (41) என்பவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போது அவ்வழியாக சிறை துணை ஜெயிலர் சாந்தகுமார் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவ ரிடம் கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரை தாக்கி சாப்பாட்டு தட்டை வீசினார். இதில் துணை ஜெயிலர் சாந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் நைஜீரியா நாட்டு கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News