தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் - தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி

Published On 2024-03-30 15:42 GMT   |   Update On 2024-03-30 15:42 GMT
  • தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன
  • அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், 1,085 வேட்பு மனுக்களில் 135 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர். அதில், 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்கள் அடங்கும்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி போடுகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது.

பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

1. திருவள்ளூர் (தனி)-14

2. வடசென்னை-35

3. தென்சென்னை-41

4. மத்தியசென்னை-31

5. ஸ்ரீபெரும்புதூர்-31

6. காஞ்சிபுரம் (தனி)-11

7. அரக்கோணம்-26

8. வேலூர்-31

9. கிருஷ்ணகிரி-27

10. தர்மபுரி-24

11. திருவண்ணாமலை-31

12. ஆரணி-29

13. விழுப்புரம் (தனி)-17

14. கள்ளக்குறிச்சி-21

15. சேலம்-25

16. நாமக்கல்-40

17. ஈரோடு-31

18. திருப்பூர்-13

19. நீலகிரி (தனி)-16

20. கோவை-37

21. பொள்ளாச்சி-15

22. திண்டுக்கல்-15

23. கரூர்-54

24. திருச்சி-35

25. பெரம்பலூர்-23

26. கடலூர்-19

27. சிதம்பரம் (தனி)-14

28. மயிலாடுதுறை-17

29. நாகப்பட்டினம் (தனி)-9

30. தஞ்சாவூர்-12

31. சிவகங்கை-20

32. மதுரை-21

33. தேனி-25

34. விருதுநகர்-27

35. ராமநாதபுரம்-25

36. தூத்துக்குடி-28

37. தென்காசி (தனி)-15

38. திருநெல்வேலி-23

39. கன்னியாகுமரி-22

Tags:    

Similar News