பிளாஸ்டிக் இல்லா கொடைக்கானல்- சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அமெரிக்க இளைஞர்
- சுற்றுலா நகரான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- கொடைக்கானலில் மதுபாட்டில்களை உபயோகித்தபின் அதனை திரும்ப ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது.
கொடைக்கானல்:
சுற்றுலா நகரான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் கொண்டுவருவதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. இதுதவிர கொடைக்கானலில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி உபயோகித்தபின் வீசி எரிவதை தடுக்க அதனை திரும்ப ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் அமலில் உள்ளது.
இருந்தபோதும் நகரின் பல்வேறு சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறிகிடப்பதை காணமுடிகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இதனை உண்ணும் வனவிலங்குகளும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானல் வந்த அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி கடந்த சில நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருகிறார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதனை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இயற்கையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா இளைஞர் ஏற்படுத்தி வரும் நூதன விழிப்புணர்வு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.