தமிழ்நாடு

ஆவடி பகுதியில் போலீஸ் கமிஷனர் சங்கர் விடிய, விடிய ஆய்வு

Published On 2023-07-17 06:53 GMT   |   Update On 2023-07-17 06:53 GMT
  • 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.
  • முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.

திருநின்றவூர்:

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கி அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.

ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், பூந்தமல்லி, நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கமிஷனர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசாரின் இரவுநேரக காவல் பணியை பார்வையிட்டார்.

அப்போது பணியில் இருந்த போலீசாரிடம் பாதுகாப்பு மற்றும் குறைகள் குறித்து கமிஷனர் கேட்டறிந்தார். மேலும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.

சமீபத்தில் செங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் பூத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். கமிஷனர் சங்கரின் இரவு நேர ஆய்வு காரணமாக போலீசார் விடிய, விடிய பரபரப்பாக காணப்பட்டனர்.

Tags:    

Similar News