தமிழ்நாடு

மதுரை ஜெயிலில் இருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்

Published On 2022-06-22 05:15 GMT   |   Update On 2022-06-22 05:15 GMT
MDU03220622: தேனி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக, சித்தோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அருண் குமாருக்கு ஈரோட

மதுரை:

தேனி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அருண் குமாருக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றம் வேண்டும் என்று அருண்குமார், சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை ஜெயில் நிர்வாகம் மதுரைக்கு மாற்றியது. இங்கு அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிறை வெளி வளாகத்தில் தோட்டப் பணியில் இருந்த அருண் குமார் திடீரென அங்கிருந்து தப்பினார்.

மதுரை மத்திய ஜெயில் வெளிப்புற தோட்ட வளாகத்தில் வேலை முடிந்ததும் கைதிகள் மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் அருண்குமாரை மட்டும் காணவில்லை. இதனால் ஜெயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.இது தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆயுள் தண்டனை கைதி அருண்குமார் தப்பிச் சென்ற விவகாரத்தில் பணியின்போது அஜாக்கிரதையாக இருந்த போலீஸ் ஏட்டு பழனிக்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

தப்பிச் சென்ற கைதியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அருண்குமார் திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்பு அவரை மதுரைக்கு கொண்டுவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News