தமிழ்நாடு

முரசொலி செல்வம் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

Published On 2024-10-10 22:17 GMT   |   Update On 2024-10-10 22:17 GMT
  • முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
  • முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.

முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் வலைதளத்தில், விஜயகாந்த் உடன் நல்ல நட்புடன் பழகியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் மறைவு தி.மு.க.வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News