தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்துகள்- விளக்கம் கேட்டு நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-01-31 12:56 GMT   |   Update On 2024-01-31 12:56 GMT
  • சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
  • பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.

மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News