தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் மழை... மதியத்தில் சில்லென்று மாறிய வானிலை

Published On 2024-10-05 08:51 GMT   |   Update On 2024-10-05 08:52 GMT
  • மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
  • நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. மதிய வேளையில் மழை பெய்து வருவதால் சென்னை நகரத்தில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News