நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது ராஜேஷ் தாஸ்க்கு திடீர் நெஞ்சுவலி- ஜாமினில் விடுவிப்பு
- பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை வழக்கு.
- காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை.
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அவரது முன்னாள் மனைவியும் தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா வெங்கடேசன், தனக்கு சொந்தமான பங்களாவின் காவலாளியை தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர்களை மிரட்டியதாக ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் காவலர்களை வேலை செய்யாமல் மிரட்டியதாக பிரிவு 353-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.