தமிழ்நாடு

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

Published On 2024-02-24 07:58 GMT   |   Update On 2024-02-24 07:58 GMT
  • இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
  • விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம்:

தமிழகத்தில் இருந்து வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை மன்னர்வளைகுடா மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் எல்லைதாண்டி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் அரசுடமையாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை கண்டித்து இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட 10 படகுகளை மீட்க அரசு ஒப்பபுதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதமடைந்த படகுகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று காலை தொடங்கினர்.

இதில் மாவட்ட மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை வகித்தார். மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், ஆல்வீன், தெட்சிண மூர்த்தி, சமுதாய தலைவர் சாம்சன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

உண்ணாவிரதத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News