பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தருக்கு ஆதரவாக ரவிபச்சமுத்து பிரசாரம்
- கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார்.
- பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள்.
பெரம்பலூர் மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, வேப்பந்தட்டை பகுதி பாண்டகபாடியில், IJK தலைவர் ரவி பச்சமுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளித்து, பல்வேறு நலத் திட்டங்களை டாக்டர் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். தற்போது, ஆயிரத்து 200 பேருக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர்தர சிகிச்சையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருப்பதாக டாக்டர் ரவிபச்சமுத்து சுட்டிக்காட்டினார்.10 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்துள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். தொகுதி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தர, டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டை பகுதியின் சிறு நிலா ஊராட்சியில், டாக்டர் பாரிவேந்தருக்காக வாக்கு சேகரித்த IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அமைச்சர்களுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். மீண்டும் அவரை வெற்றிபெறச் செய்தால், தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவார் என ரவிபச்சமுத்து உறுதி அளித்தார். இலவச உயர்கல்வி, இலவச உயர் சிகிச்சை, வேலைவாய்ப்பு முகாம் என பல்வேறு பொன்னான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.