தமிழ்நாடு

காந்தி-காமராஜர் மண்டபம் செல்ல கட்டுப்பாடுகள்

Published On 2024-05-31 05:39 GMT   |   Update On 2024-05-31 05:39 GMT
  • விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
  • மண்டபத்தின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடற்கரையையொட்டி காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளது. பிரதமர் வருகையையடுத்து காந்தி, காமராஜர் மண்டபத்திற்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் காந்தி மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. காலை 10 மணிக்கு பிறகு காந்தி மண்டபத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மண்டபத்தின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

காமராஜர் மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். காமராஜர் மண்டபம் வளாகத்திற்குள் டவர் அமைக்கப்பட்டு போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News