7 பேருக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது- சிறந்த மாநகராட்சி கோவைக்கு ரூ.50 லட்சம் பரிசு
- பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
- முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் ஒரு மண்டலம், சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விருது சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த மாநகராட்சி-கோவை-ரூ.50 லட்சம், சிறந்த நகராட்சி-திருவாரூர் ரூ.30 லட்சம், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை மாவட்டம்) ரூ.20 லட்சம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக 3 ஆண்கள் மற்றும் சிறப்பு நிகழ்வாக 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்கள் பிரிவில் நெ. கதிரவன் (ஈரோடு மாவட் டம்), ஜோஷன் ரெகோ பெர்ட் (கன்னியாகுமரி மாவட்டம்), சி.ஜெயராஜ் (கடலூர் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் செ.நிதிதா (கடலூர் மாவட் டம்), கவின்பாரதி (புதுக்கோட்டை மாவட்டம்), ச.உமாதேவி (விருதுநகர் மாவட்டம்), கா.ஆயிஷா பர்வீன் (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.