தமிழ்நாடு

காலாபாணி நாவல்

null

எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதியுள்ள காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

Published On 2022-12-22 11:21 GMT   |   Update On 2022-12-22 11:43 GMT
  • காளையார் கோவில் போரை முன் வைத்து எழுத்தப்பட்ட நாவலுக்கு மத்திய அரசின் விருது.
  • தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கை இதில் இடம் பெற்றுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்து நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் இந்த நாவலை எழுதி உள்ளார். இதற்கு முன்னர் தமது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து காலா பாணி நாவலை அவர் எழுதியுள்ளார். நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்ற இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News