வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு காரணம் சீமான்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
- தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார்.
- வடமாநில தொழிலாளிகள் விவகாரத்தில் அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.சம்பத் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்க ளிடம் கூறியதாவது:
வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஒருசிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் பேசிவருகிறார். இந்த பிரச்சினைக்கு இவர்கள் தான் காரணம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார்.
சீமான் தனது பல்வேறு உரைகளில் தண்டனைக்கு உகந்தவாறு பேசி வருகிறார்.
வடமாநில தொழிலாளிகள் விவகாரத்தில் அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது. அம்பு ஏய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, உ.பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜி.சிதம்பரம், தாம்பரம் சிவராமன், ஷெரிப், பி.வி.தமிழ்ச்செல்வன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி, சூளை ராஜேந்திரன், சந்திர சேகர், முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.