நீட் தேர்வு நடத்த அமெரிக்க நிறுவனம் எதற்கு? சீமான்
- நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்.
- மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்வது நீங்க தான்.
இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் "உயிர் தமிழுக்கு" திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வு குறித்து காட்டமான கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்து சமீபத்தில் கூட 50-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் சிக்கினர். அப்போ நீங்கள் போலி மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? தரமான மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்,, இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா?"
"வடமாநிலத்தில் எந்த பெண்ணும் தோடு, மூக்குத்தியை கழற்ற வைக்கப்படவில்லை. என் மாநிலத்தில் மட்டுமே தோடு, மூக்குத்தி என எல்லாவற்றையும் கழற்ற வைக்கின்றீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் தான் இ.வி.எம். இயந்திரத்தை எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றீர்கள்," என்று தெரிவித்தார்.