தமிழ்நாடு

சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை- கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Published On 2024-05-31 07:46 GMT   |   Update On 2024-05-31 07:46 GMT
  • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்தூரி மருந்து கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
  • குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை:

மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவர் மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்.

அவரது மருந்து கடையில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்தூரி கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் முடிவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதையடுத்து சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த மருந்து விற்பனை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதற்குமத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News