தமிழ்நாடு

மூத்த குடிமக்கள் இலவச பஸ் பயண டோக்கன்கள் 21-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது

Published On 2024-06-18 02:04 GMT   |   Update On 2024-06-18 02:04 GMT
  • மூத்த குடிமக்கள் இலவச பஸ் பயண டோக்கன்கள் பணிமனை அலுவலகத்தில் வழங்கப்படும்.
  • கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை:

மாநகர் போக்குவரத்து கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வருகிற 21-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை (காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை) வழங்கப்படும்.

அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்திலும் வழங்கப்படும். சென்னை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News