தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

Published On 2024-08-13 12:07 GMT   |   Update On 2024-08-13 12:07 GMT
  • எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், 2028 ஜனவரி மாதம் வரை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருப்பார்.
  • கடந்த 2 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பிரபாகர், 2028 ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக இருந்த முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இதற்கு முன்னதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதனை கவர்னர் ஆர்.என்.ரவி பரிசீலிக்காமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News