தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் ஜூன் 23 காலை வரை பெய்த மழை அளவு 92.8 மி.மீ ஆகும்.
- இக்காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை 40.5 மி.மீ ஆகும்.
இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பொழிவை பெறும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் ஜூன் 23 காலை வரை பெய்த மழை அளவு 92.8 மி.மீ ஆகும். இக்காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை 40.5 மி.மீ ஆகும்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.